டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் வெடிப்பு சத்தம்! ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய முக்கிய ஒலி அமைப்பு
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்தபோது எழுந்த வெளிப்படையான ஒலியினை அமெரிக்க கடலோர காவல்படையின் கடல் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலின் தாய்க் கப்பலில் இருந்த கண்காணிப்பு கருவிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கார் கதவு தட்டப்படுவதைப் போன்ற ஒரு மெல்லிய விரிசல் சத்தம் இதன்போது வெளிபடுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்
அந்த சத்தம் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்த தருணமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 3,300 மீட்டர் ஆழத்தை அடைந்து என்றும், கடல் தளத்திற்கு இறங்குவதற்கு சுமார் 90 நிமிடங்கள் இருந்ததால், அதில் இருந்த பயணிகளுக்கு டைட்டானிக் கப்பலின் நெருக்கமான காட்சியைப் பார்த்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.
ஒரு கப்பலில் இருந்து நீர் வழியாக தரவை அனுப்பும் ஒவ்வொரு அமைப்பும் "சிக்னல் நேரம் அல்லது செயலாக்கத்தை அவை எவ்வாறு செய்கின்றன எனபதை பொறுத்து வேறுபடுகிறது.
இதனுடன் தொடர்புடைய சில உள்ளார்ந்த தரவை பெறுவதற்கான இடையூறுகள் அல்லது தாமதத்தைதையும் அவை கொண்டுள்ளன" என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாகவே "வெடிப்பு இடம்பெற்ற செய்தியை ஆய்வாளர்கள் உறுதி செய்த பின்னரே நீர்மூழ்கி கப்பலின் 'எடைகள் குறைந்துவிட்டன' என்ற செய்தி அனுப்பப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
மேலும், அந்தச் செய்திக்குப் பிறகே தாய்க் கப்பல் துணைக் கப்பலுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
