தந்தையுடன் முரண்பட்ட நபரை வெட்டிக் கொலை செய்த மகன்!
குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறை, அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பபரந்த, கோட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்துள்ள நபர், தலஹகம, பெலிகெட்டிய பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அயல்வீட்டுக்காரருடன் முறுகலில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையிலான முறுகல் கைகலப்பில் முடிந்த நிலையில், அயல்வீட்டுக்காரரின் மகன் குறித்த நபரைக் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர்
சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அக்குரஸ்ஸ
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri