நித்திரையிலிருந்த சிறுவன் பாம்பு தீண்டி மரணம்!
நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த 12 வயதான ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளானர்.
இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலைக்கு கொண்டு செல்கையிலே உயிரிழந்துள்ளர்.
மேலும் , சிறுவனை தீண்டிய பாம்பை இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது பாம்பு தீண்டி விசமானதாலே உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam