முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஆறாவது நாள் ஊர்தி பவணி ஆரம்பம்(Video)
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஊர்திப் பவனி இன்று (17.05.2023) ஆறாவது நாளாக யாழ்ப்பாணம் - வரணி சந்தி பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
ஊர்திபவனி யாழ்.வரணி சந்தியில் காலை 9:30 மணியளவில் தரித்திருந்தபோது பொதுமக்கள் பலரும் சுடர் ஏற்றி, மலர்தூவி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பயணிக்கும் இடங்கள்
இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம் பளை பரந்தன் தர்மபுரம் விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை சென்றடையும் என தென் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாளை காலை (18.05.2023) வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்தி சென்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் ஊர்தி பவனியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும் எனவே அனைவரையும் இந்த ஊர்தி பவனியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி: திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
