இலங்கையில் 8 மாவட்டங்களில் நிலைமை மிக மோசம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் 8 மாவட்டங்களில் கோவிட் -19 வைரஸ் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், கண்டி, மாத்தளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் வரும் நாட்களில் பாரதூரமானதக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் காணப்படும் தொற்று நோய் பரவல் நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம், அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்கிளல் சரியான பரிசோதனைகளை நடத்தி தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது என்பனவும் தாமதமாகி இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான நிலைமையில் இருந்து தப்பிக்க உடனடியாக பயண தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார ஆலோசனைகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அந்த சங்கம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
