இலங்கையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: நிலைமை மேலும் மோசமடையலாம்! ரணில் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாட்டில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
எனவே, அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் மற்றும் அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறியவர்களும் அரசியல் முட்டுக்கட்டைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கட்சித் தலைவர்கள் கூடி நெருக்கடி குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர வேண்டும் என்றும், நாட்டின் நிலைமையை நாடாளுமன்றம் கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.