அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு சிங்கப்பூர் பிரஜைகளுக்கு அறிவிப்பு
சிங்கப்பூர் அரசாங்கம், இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூர் பிரஜைகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இலங்கையில் தங்கியிருக்கும் சிங்கப்பூர் பிரஜைகள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உன்னிப்பாக கேட்டு உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
காப்புறுதி

இலங்கைக்கு பயணம் செய்யும் சிங்கப்பூர் பிரஜைகள் கட்டாயமாக முழு அளவில் காப்புறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.