இலங்கையின் நிலைமைக்கு ரஷ்யாவும் பங்காளி:அமெரிக்கா
உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடையை ஏற்படுத்தியது இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஒரு பங்களிப்பை வழங்கி இருக்கலாம் எனவும் மேலும் நெருக்கடிகள் உருவாகலாம் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமப்பின் பாதிப்பு உலகமெங்கும்
ரஷ்ய ஆக்கிரமிப்பின் பாதிப்பு உலகில் அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ளது. 20 ஆயிரம் மில்லியன் தொன் தானியங்களை உக்ரைனில் இருந்து வெளியில் கொண்டு செல்ல இடமளிக்குமாறு ரஷ்யாவிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உணவு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைக்கு ரஷ்யாவின் உக்ரைன் மீதான் ஆக்கிரமிப்பு காரணம்.
தாய்லாந்தில் உரத்தின் விலைகள் வான் அளவுக்கு உயர ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பே காரணம் எனவும் பிலிங்கன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பல வாரங்களாக நடந்து வந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை அழிந்து விட்டது என சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதேவேளை ஒரு அரசியல் கட்சிகள் நன்மைக்காக அல்ல இலங்கையின் அபிவிருத்திக்காக இந்த சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்வதாகவும் பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு தமது நிலைப்பாடுகளை தெரிவிக்க உரிமை உள்ளது. போராட்டகாரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக எச்சரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் போராட்டங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட வன்முறை செயல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். வன்முறை செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் பிலிங்கன் மேலும் தெரிவித்துள்ளார்.