கொத்மலை ஓயாவில் காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராடச் சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.
இதன் போது கால் தவறிக் குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ எனத் தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞனைத் தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam