சவாலுக்கு உள்ளாகியுள்ள ஆளும் கட்சியின் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதற்கமைய ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலம் சில சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள்
இந்நிலையில், தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், அவருக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இதற்கு முன்னர், கிட்டத்தட்ட நூற்றி இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பிளவினால், நாமல் ராஜபக்ச மற்றும் மொட்டுதரப்பின் சிலரை எதிர்க்கட்சியில் அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் பல அரச அமைச்சர்களும் பொது ஜன பெரமுனவின் கருத்துடன் உள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அவர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |