ஆளும் கட்சியின் கூட்டம் இன்று
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று, பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, உதய கம்மன்பில எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தன்னிச்சையாக மேற்கொண்டிருக்கின்றார் என கூறி, கடந்த மாதம் 22ஆம் திகதி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam