உரோமின் தலைவிதியை மாற்றிய ரூபிகானின் நிலை ரணிலால் இலங்கைக்கும்!
கி. மு 49 இல், சீசர் கௌல் (தற்போதைய பிரான்ஸ் மற்றும் வடக்கு இத்தாலியின் பகுதிகள்) போர்களில் வெற்றி பெற்று, பெரும் செல்வாக்கு மிக்க தளபதியாக உயர்ந்திருந்தார்.
அப்போது, உரோம செனட் சபை அவரை பதவி விலகி உரோமிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டது.
ஆனால் சீசர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.ரூபிகான் ஆறு, உரோம குடியரசின் வடக்கு எல்லையாக இருந்தது. மேலும் ஒரு தளபதி தனது இராணுவத்துடன் இந்த ஆற்றைக் கடந்து இத்தாலிக்குள் நுழைவது, செனட் சபையின் அதிகாரத்திற்கு எதிரான செயலாகக் கருதப்பட்டது.
அரசியல் எதிரி
சீசர், தனது அரசியல் எதிரியான பாம்பே (Pompey) மற்றும் செனட் சபையின் எதிர்ப்பை மீறி, தனது படைகளுடன் ரூபிகான் ஆற்றைக் கடந்து உரோமை நோக்கி அணிவகுத்தார். இந்தச் செயல், உரோமையில் உள்நாட்டுப் போரைத் தொடங்கியது.
இறுதியில் சீசர் வெற்றி பெற்று சர்வாதிகாரியாக ஆனார். ரூபிகான் ஆற்றைக் கடந்தது, "மீள இயலாத நிலைக்குச் செல்வது" என்பதற்கு அடையாளமாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது (ஆங்கிலத்தில் "Crossing the Rubicon").
இந்த நிகழ்வு சீசரின் துணிச்சல், முடிவெடுக்கும் திறன் மற்றும் உரோம குடியரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட முக்கிய தருணமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த விடயத்தினை மேற்கோள்காட்டி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஒரு எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிமல் - சாலிய
இந்த நிலையில் ரணில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் (Saliya Pieris) தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். “கி.மு 49 இல் கவுலின் ஆளுநரான ஜூலியஸ் சீசர் ரூபிகான் நதியைக் கடந்தது தொடர்பான பதிவு இது.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ரூபிகானைக் கடப்பது, கி.மு 49 ஜனவரியில், உரோமில் உள்ள செனட்டின் உத்தரவுகளை மீறி, கவுலின் ஆளுநர் ஜூலியஸ் சீசர் தனது இராணுவத்துடன் ரூபிகானைக் கடந்தார்.
ரூபிகானைக் கடந்தவுடன், திரும்பிச் செல்வது சாத்தியமில்லை. அதுதான் திரும்பப் பெற முடியாத புள்ளி. அது ஒரு உள்நாட்டுப் போருடனும், ஜூலியஸ் சீசரின் இறுதி வெற்றியுடனும் முடிந்தது.
இந்த சம்பவம் ரூபிகானைக் கடப்பது அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியைக் கடப்பது என்ற சொற்றொடருக்கு வழிவகுத்தது” என கூறியுள்ளார். அரசியலிலோ அல்லது நிர்வாகத்திலோ சில தருணங்கள் உள்ளன, அவை ரூபிகானைக் கடக்கும் தருணங்கள் அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியாகும்.
அந்த முடிவுகள், நாட்டின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டு, புத்திசாலித்தனமாகவும், மனதில் கொண்டும் எடுக்கப்பட்ட முடிவுகளாகக் கருதப்பட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
எனினும் இந்த கருத்துக்கு பதில் வழங்கும் விதமாக பிமல் ரத்நாயக்க, “11 மாதங்களுக்கு முன்பு இலங்கை மக்கள்தான் "ரூபிகானைக் கடந்தார்கள்". நாட்டை ஒரு உண்மையான குடியரசாக மாற்றுவதற்கான இயக்கத்தின் பின்னணியில் இருந்த உந்து சக்தியாக இருந்தது அவர்களே. என விவரித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரத்நாயக்க தனது கருத்துக்களை மேற்கண்டவாறு வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






