ரணில் கைதின் சட்ட சிக்கல் தொடர்பில் அளிக்கப்பட்ட விளக்கம்
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 7ஆவது சரத்தில் 35/1இல் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமையில் ஜனாதிபதிக்கு எதிராக சிவில் வழக்கு அல்லது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய முடியாது.
மேலும் 19ஆவது திருத்தச்சட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதியால் அடிப்படை மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தால் நீதிபதியால் வழக்கு தாக்கல் செய்யலாம் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
எவ்வித சட்டவிதிகளும்
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது. வழக்குத் தாக்கல் செய்வதற்கான மேற்குறிப்பிட்ட சிறப்புரிமைகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பொருந்தாது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், இதற்கு முன்னர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு B அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கியே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் அடிப்படையிலே ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தீவிர விசாரணைகள் நடைபெற்றுள்ளதாகவே தோன்றுகிறது. இதில் எவ்வித சட்டவிதிகளும் மீறப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




