யாழில் தொடரும் வழிப்பறி:பணப் பையை இழந்த உப தபால் அதிபர்
சைக்கிள் முன்கூடையில் இருந்த பணப் பை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் யாழ்.கோப்பாயில் நடந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக பணம்
உப தபால் அதிபரான பெண், தனது பிள்ளையை ஏற்றிச் சென்றபோது சைக்கிளின் முன்கூடையில் பணப் பை இருந்துள்ளது. அதில் உப தபால் அதிபரின் சொந்தப் பணம் மற்றும் அலுவலக பணம் என்பன இருந்தன என்று கூறப்படுகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முன்கூடையில் இருந்த பணத்துடன் பையை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
