யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை! க.மகேசன் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு தந்து இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரிக்கும் குற்றச் செயல்கள்
“யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இதனைக் கட்டுப் படுத்துவதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். என்றாலும் வெளிமாவட்டத்திலிருந்து போதைப் பொருள் இங்கே கொண்டு வரப்படுகிறதா? இல்லையென்றால் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுகிறதா? என்பது சரியாகத் தெரியவில்லை.
தொடரும் மோசமான நிலை
ஆகவே இதனைக் கட்டுப்படுத்த சகல தரப்பினரும் முன்வர வேண்டும். எம்மால் வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் வாராந்தம் சுமார் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மிகவும் மோசமான நிலை. பெயர் குறிப்பிடப்படாத பல போதைவஸ்துகள் இங்கு உலாவுகிறது” என்றார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
