இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை! வேலுசாமி ராதாகிருஷ்ணன்

Sri lanka Tamilnadu V.Radhakrishnan
By Thirumal Sep 12, 2021 01:19 PM GMT
Report

இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் இந்தியா தமிழகத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை. அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை.

தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை.

புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.

இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது. 30-வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில் புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்த்தியில் இருப்பதை காணமுடிகிறது.

இலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதன் மூலம் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது, கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சினையாக இருந்தது. ராஜீவ்காந்தி கொலை செய்ததாகவும் இருந்ததால் அதன் அடிப்படையில் போராளிகள் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம்.  

இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு அதற்கான சட்ட திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர்.

புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம் என்றார்.

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது, சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கையில் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. அதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 6மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும்.

கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது.  அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் ஊடாக அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US