ரிஸாட் பதியுதீன் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் - சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விரும்பினால் அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீனை அழைத்து வருமாறு படைக்கள நரேந்திர சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரும் போது அரசாங்கம் விதித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வுத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொலை குற்றத்துக்காக சிறையில் இருக்கும் ரத்னபுரி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகர விரும்பினால் அவரையும் நாடளுமன்ற
அமர்வுக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு படைக்கள சேவிதர்
நரேந்திர பெர்னாண்டோ தகவல் அளித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
