மட்டக்களப்பு மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
மட்டக்களப்பு-செங்கலடி பகுதியில் அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக செங்கலடி பகுதியில் குறிப்பாக வர்த்தக நிலையங்களுக்குள் நுழையும் கொள்ளையர்கள் தங்களை "சேல்ஸ் ரெப்" sales rep என அடையாளப்படுத்தி வர்த்தகர்களுடன் உரையாடி பண மோசடியிலும் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபடுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
இதேவேளை நேற்று காலை செங்கலடி சந்தை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர் தன்னை ஒரு "சேல்ஸ் ரெப்"sales rep என அடையாளப்படுத்தி பேசியதுடன் பால்மா பொதிகளுக்கான கணக்கு மிகுதி உள்ளதாக தெரிவித்து பணம் கோரியுள்ளார்.
ஆரம்பத்தில் நம்பி பேசிய வர்த்தகர் பின் அவரின் பேச்சில் சந்தேகமடைந்துள்ளார்.
பின் குறித்த வர்த்தக நிலையத்தற்கு வந்திருந்தவர்கள் அந்த நபர் திருடன் என்பதை அறிந்ததையடுத்து திருடன் தப்பியோடியுள்ளார்.
பொலிஸாரின் கோரிக்கை
செங்கலடி ஏறாவூர் நகர் பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே வர்த்தகர்கள், பொதுமக்கள் இது போன்றவர்களிடமிருந்து
எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
