தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? - வெளியாகியுள்ள தகவல்
உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இலங்கையில் தற்போது ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை சடுதியாக உயரந்துள்ளது.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.
கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வரும் காலத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்த வேளையில் தங்கம் விலை குறைய வேண்டும். எனினும், தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்தது வருகின்றது.
இதற்கு இந்தியா மற்றும் சீனா முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா
World Gold Council இன் தகவல் படி கடந்த ஆண்டு இந்தியாவில் நகை வாங்குவோரின் அளவு சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்திய தங்க விற்பனை 611 மெட்ரிக் தொன் ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், சீனாவில் தங்கம் வாங்கும் அளவு சுமார் 63 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், அங்கு தங்க விற்பனை 675 தொன் ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விற்பனை 2021ல் மட்டும் இந்தியா மற்றும் சீனா சுமார் 556 தொன் தங்கத்தைக் கூடுதலாக வங்கியுள்ளது.
2021ம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்தது. இதனால் 558 தொன் தங்கம் விற்பனை இப்பிரிவின் மூலம் சரிந்தது. இது எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகத் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
Supply and demand
Supply and demand ஈடு செய்யப்பட்டதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து உயர்வாக இருக்க முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் ஊரடங்கு
சீனா மக்கள் 2019ம் ஆண்டு சுற்றுலாவுக்காக மட்டுமே 255 பில்லியன் டொலர் செலவு செய்துள்ளனர். கோவிட் தொற்றுக் காரணமாக மக்கள் அனைவரும், நாட்டுக்குள்ளேயும் முடங்கிய காரணமாக இந்தத் தொகை அப்படியே தங்கம் மீது திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள்
இந்தியாவில் கோவிட் தொற்றுக் காரணமாக ஒன்றரை ஆண்டுகள் முற்றாக முடங்கிய நிலையில், 2021ல் இந்தியா முழுவதும் திருமணங்கள் அதிகமாக நடந்தன. இந்தியத் திருமணங்களில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறிப்போன நிலைமை
இந்தியாவில் 10 கிராம் தங்கம் 30,000 ரூபாய் தாண்டு போதெல்லாம் தங்கம் விற்பனை மற்றும் இறக்குமதி பெரிய அளவில் குறையும், ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வருமானம், வேலைவாய்ப்பு இழந்த காலகட்டத்திலும் தங்கம் இறக்குமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது தான் முக்கியமான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி ஸ்பெஷல் அருள் எப்பவுமே இருக்குமாம்! அதிர்ஷ்டசாலிகள்தான் Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

தமிழரை மணந்த ரம்பாவின் ரொமான்ஸ்! அழகிய ஜோடியை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் Manithan
