மட்டக்களப்பை நடுங்க வைத்த சம்பவம் - கிணற்றிலிருந்து தப்பி வந்த பெண்ணின் பகீர் தகவல்

Batticaloa Sri Lanka Women
By Bavan Mar 31, 2026 08:46 AM GMT
Report

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையின் பின் கிணற்றில் வீசப்பட்ட பெண் அன்றைய தினத்தில் நடத்த சம்பவத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில் அவர் ஊடகங்களுக்கு இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

பெண்ணின் தகவல்

இதன்போது அவர் மேலும் கூறுகையில், நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது. நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினர். என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினர். அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம்.

முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார். பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன்.

மட்டக்களப்பை நடுங்க வைத்த சம்பவம் - கிணற்றிலிருந்து தப்பி வந்த பெண்ணின் பகீர் தகவல் | Batticaloa Kidnapping Incident Woman S Live Report   

அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன்.

நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன். மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார். நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம்.

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

குளிர்பானத்தை குடித்தவுடன் மயக்கம்

தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது. அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது. வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பான போத்தல்களை வாங்கினார். எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன்.

வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார். அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார். அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர்.

மட்டக்களப்பை நடுங்க வைத்த சம்பவம் - கிணற்றிலிருந்து தப்பி வந்த பெண்ணின் பகீர் தகவல் | Batticaloa Kidnapping Incident Woman S Live Report

ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது. ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன்.

நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?" என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன்.

இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், "அம்மா, அம்மா" என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?" என்று கத்தினேன். அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன்.

அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார அவசரகால நிலை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார அவசரகால நிலை குறித்து வெளியான தகவல்


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US