இலங்கையில் 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 06 மாத காலத்திற்கு கட்டணமின்றி இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (31) இதனை குறிப்பிட்டுள்ளார்.

2025-07-21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க சட்ட வரைவாளர் தயாரித்த வரைவு விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan