தமிழர் மனதில் பசுமையாக காணப்படும் சிங்கள ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் - ந.ஸ்ரீகாந்தா

Srilanka Political Srikantha Sinhala Rulers
By Siva thileep Mar 26, 2022 05:33 PM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

காலத்திற்கு காலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமது உடனடிஅரசியல். தேவைகளுக்காக வழங்கிச் சென்ற வாக்குறுதிகள் எல்லாம் தமிழர் மனங்களில் இப்பொழுதும் பசுமையாகவே உள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

கூட்டமைப்புடன் நேற்று நிகழ்ந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகளில், அரசாங்கத் தரப்பினால் மேலோட்டமான முறையில் வாக்குறுதிகள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் சகல அத்துமீறல்களும் அடாவடி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படாத வரையில், இந்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

அத்துடன், அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதிலும், நீண்ட பல வருடங்களாக சிறைக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, காலதாமதம் செய்யாமல் விரைவாக விடுவிப்பதிலும் அரசாங்கத்திற்கு எந்த தடையும் இருக்க முடியாது.

இந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படுகின்றன. அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் தனது வாக்குறுதிகளின் விடயத்தில் அரசாங்கம் தன்னைத் தானே நிரூபித்தாக வேண்டும்.

1977ல், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் இருந்து 40 வருடங்கள் கழித்து சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் வரையில், தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளுக்கு சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள்காற்றில் பறக்கவிடப்பட்டதை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட உரிமை கோரும் தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் உதவியும், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளின் ஆதரவும் அவசரமாக தேவைப்படும் இக்கட்டான இந்த நேரத்தில், தமிழர்களை தான் அனுசரித்துப் போவதான ஓர் தோற்றப்பாட்டினை காட்டுவதற்கு அது முயற்சிக்கின்றது என்பது தெட்டத்தெளிவானது.

தமது பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது.

காணமலாக்கப்பட்டதமிழர்களின் விவகாரத்தில், இந்த அரசாங்கம் எதுவும்செய்யமாட்டாது. அப்படிச் செய்வதாக, இருந்தால் தமக்குத் தாமே படுகுழிதோண்டுவதாகவே அது இருக்கும் என்பதும் அரசாங்கத் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதனாலத் தான் காசைத் தந்து, கண்ணீர் விடும் உறவுகளின் வாய்களைமூட வைக்கலாம் என்ற முட்டாள்த்தனமான சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.

இந்த நிலைமையில், தமக்குள் பரஸ்பர விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் தமிழர் தரப்பு தவிர்த்துக் கொண்டு, இன்றையசூழ்நிலையை இனி எப்படி பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

விசுவாசத்துடன் சொல்வதானால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்பது நடக்குமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது உத்தியோகபூர்வமாக தனக்கு வழங்கப்பட்டு, இப்பொழுதும் அரசாங்கத்தின்தயவில் தான் தொடர்ந்து வசித்து வரும் ஆடம்பர அரச மாளிகையைமீண்டும்அரசாங்கத்திடம் கையளித்து விட்டு, ஓர் பாராளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் தனக்கு தரப்பட வேண்டிய அரசாங்க குடியிருப்பு தொகுதி வீடுஒன்றிலிருந்து, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சம்பந்தன் வரமுடியுமாக இருந்தால், பேச்சுவாரர்த்தை மேசையில் அவரின் ஆக்ரோச குரலுக்கு பலமடங்கு பலம் சேரும்.

ஏற்கனவே, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள நிபந்தனை விதிக்கப்படவேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாடு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும் அதன் ஏனைய இரண்டு கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து டெலோ ஒதுங்கி நின்றதன் மூலம், பேச்சுவார்த்தை மேசையில் சம்பந்தனின் குரலுக்கு எதிர்மறையான முறையில் வலு சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US