மின் துண்டிப்பின் எதிரொலி! எதிர்நோக்கவுள்ள மற்றொரு சிக்கல்
எதிர்வரும் நாட்களில் மின் தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில் கொழும்பு நகருக்கான நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பிரதான நீர் வழங்கல் நிலையமான அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏனைய சுத்திகரிப்பு நிலையங்களைப் போன்று இல்லாமல், நீர் இறைக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் பட்சத்தில், கொழும்புக்கு தண்ணீர் பவுசர்கள் மூலம் மாத்திரமே தண்ணீர் வழங்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri