எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிரணியினரை சந்தித்த பிரதமர்
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.
சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில், அந்த இடத்துக்குச் சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்தவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தும்போது இதற்கும் மேல் எம்.பிக்களை கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன்போது, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்ததுடன், அவர்களுடன் கடந்த காலங்களில் தான் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam