வேகமாக குறையும் விலை - வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
நாட்டில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வட்டி விகித அதிகரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சில வாகனங்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர தெரிவித்தார்.
வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகரிப்பு
இதன்படி, Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Toyota Axio, Toyota Premio, Toyota RACE, C.H.R, வெசல், கிரேஸ் போன்ற கார்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக குலதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
