இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடிகள்! வெளியானது மற்றுமொரு அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் உணவு பொதி ஒன்றின் விற்பனை விலை மேலும் அதிகரிக்கலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இடைத்தரகர்களே காரணம் என அதன் தலைவர் அசேல சம்பத் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தரமற்ற அத்தியாவசியப் பொருட்கள் பெறப்படுவதால் தரமற்ற உணவுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு காலை நேர உணவுப்பொதி, 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மதியநேர உணவுப்பொதி ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மதிய உணவு பொதி 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri