இலங்கையில் முட்டையின் விலை 50 ரூபாய் - கோழி இறைச்சி விலை 1000 ரூபாய்?
கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை கடுமையாக உயரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 900 - 1000 ரூபாய் வரை அதிகரிக்கும் எனவும் முட்டை 40 - 50 ரூபாய் வரையில் அதிகரிக்கவுள்ளதாகவும் கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாமல் கோழி தீவனம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள பல கோழி மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் என கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்தார்.
இந்த நிலையில் மீன் விலையும் பாரிய உயர்ந்துள்ளது. அதற்கமைய தலபத் ஒரு கிலோ கிராம் 2400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் பரா மீன் ஒரு கிலோ கிராம் 1800 ரூபாய்க்கும் விற்பைன செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan