வரலாற்றில் இல்லாதளவு மற்றுமொரு விலையும் அதிகரிப்பு
வரலாற்றில் இல்லாத வகையில் வெற்றிலையின் விலை 10 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குலயாபிட்டிய, பகமுன, நாவுல போன்ற பகுதிகளில் வெற்றிலை வியாபாரம் பிரதானமாக இடம்பெற்று வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொத்தாக ரூ.850க்கு வெற்றிலையினை பெற்று சில்லரை விற்பனை நிலையத்தில் ஒரு இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் வெற்றிலையின் விலை ரூ.2.50 முதல் ரூ.5.00 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிலையின் விலை திடீரென 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உரம் மற்றும் விவசாய இரசாயன தட்டுப்பாடு காரணமாக வெற்றிலைச் செய்கையின் வளர்ச்சியின்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு என்பனவே விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம் என்றும் வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு