தோசை ஒன்றின் விலை ரூபா 100! தேநீரின் விலையும் அதிகரிப்பு: வெளியானது புதிய விலைப் பட்டியல்
நாட்டில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இவ்வாறு சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி நிலை
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டை ரொட்டி, பராட்டா, றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, அப்பம், கறி பனிஸ் உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தேநீர், பால் தேநீர் என்பனவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப் பட்டியல்
முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது. பராட்டாவின் விலை 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பொதியின் விலை அதிகரிப்புடன், பொதுமக்கள், காலை உணவாக சிற்றுண்டிகளை உண்பதற்கு பழக்கப்பட்டிருந்தனர்.
எனினும், கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், கறியுடன் 3 பராட்டாவின் விலை 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுணடிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, அப்பம் ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், முட்டை அப்பத்தின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேநீரின் விலை 50 ரூபாவாகவும், பால் தேநீரின் விலை 100 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகள் காரணமாக 65 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய சுயதொழில்புரிவோரின் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri