எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் : பிள்ளையான் சூளுரை
என்னைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் நடைபெறும் அதன் பின்னர் நாடாளுமன்ற பொது தேர்தல் இடம் பெறும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று (09.04.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறியுள்ளார்.
அரசியல் பணிகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைளயில், சில நேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளோம்.
நமது கட்சியானது பிராந்திய
ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை
மக்களின் நலன் கருதி எடுப்போம்.
இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த ஜனாதிபதி தோற்று வெளியேறினார் என்பது
முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் எவ்வாறான நிலைமைகள் வரும்போதும் நாம் அதனைச் சந்திக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |