நாடாளுமன்றில் ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இன்று நாடாளுமன்றிற்கு சற்றுமுன் சமூகமளித்தார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (18) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள்
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, முதலாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நிசாம் காரியப்பர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |