வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி! வெளியான விசேட வர்த்தமானி
புதிய இணைப்பு
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டியது அவசியம்.
வாகன இறக்குமதியைக் கொண்டு ஒரு தொழிற் துறை உள்ளது. தொழில் முனைவோர் உள்ளனர். எனவே வாகன இறக்குமதியை நீண்ட காலத்திற்கு தடை செய்ய முடியாது.
இதன்படி மூன்று கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்டவை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri