நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார்: ஆளும் தரப்புக்கு நாமல் சவால்
தனது கல்வி தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(18.12.2024) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவினால்(Wasantha Samarasinghe) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய நாமல்,
சட்ட பட்டம்
''சட்ட பட்டம் பெறுவது தொடர்பான பரீட்சையில் எனக்கு தனிப்பட்ட ரீதியிலான முறையில் கண்காணிப்பு இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அது முற்றிலும் தவறான கருத்து. அதனை நான் நிரூபிக்க தயாராக உள்ளேன்.
எனினும், அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுகிறேன்.
மேலும், அது பொய்யென்றால் உங்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து விலகுவார்களா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |