ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு: யாழில் வீதிக்கிறங்கிய மக்கள்
யாழ்ப்பாணத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வடமராட்சி பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு இன்று குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதங்கேணி, மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களே இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். தாழையடி
கடந்த 02.08.2024 அன்று யாழ். தாழையடிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாழையடிக்கென தனி கிராமமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மருதங்கேணி மக்கள் குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
''வடமராட்சி கிழக்கை கூறுபோடாதே, பிரதேச செயலகத்தை மருதங்கேணி என மாற்றாதே, போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை காட்சிப்படுத்தி குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri