முதலீட்டுச் சபை தலைவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ஜனாதிபதி
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டலாவின் ராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
சஞ்சய தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டுமென ஜனாதிபதி விரும்புதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபையின் தலைவர் அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்த்திற்கு, ஜனாதிபதியின் செயலாளர் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
கோவிட் நிலைமைகளுக்கு பின்னரான காலப் பகுதியில் நாட்டுக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை சஞ்சய கொண்டு வருவார் என ஜனாதிபதி நம்புகின்றார் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலீட்டுச் சபையின் பணிப்பளார் நாயகம் மற்றும் ஏனைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பதவி விலகல்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதேவேளை, சஞ்சயவிற்கு எதிரான முதலீட்டுச் சபை பணியாளர்கள் மகஜர் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
