குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை (video)

Srilanka President Relation Low Income Families Request put forward
By Siva Thileep Mar 18, 2022 04:45 PM GMT
Report

அந்நியச் செலாவணி நெருக்கடியுடன் சேர்ந்து இந்த கடுமையான பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறைத் திட்டம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடித்தில் மேலும் குறிப்பிடபட்டுள்ளதாவது,

75,000 ரூபாவிற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2020ம் ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் இந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் சாராம்சத்தில் சிலவற்றை உள்ளடக்கி "அப்பா எங்களுக்கு நடந்தது” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு விநியோகித்த தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ், இணைச் செயலாளர் பதவி வகிக்கும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து கட்டணங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளிலும் 40 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

"அந்நியச் செலாவணி நெருக்கடியுடன் சேர்ந்து இந்த கடுமையான பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறைத் திட்டம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, எதிர்காலத்தில் உணவு மற்றும் பலசரக்குப் பொருட்களின் விலை மேலும் உயரும். இவர்களில், தனியார்த் துறை ஏற்றுமதித் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் மற்றும் கிராமப்புற சமூகத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்." 

இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் மூன்று பிரதான முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

01. இந்த வருட இறுதி வரை அந்நிய செலாவணி நெருக்கடியைத் தற்காலிகமாகத் தணித்து, நீண்ட கால அடிப்படையில் அதற்கு முன்மொழியப்பட்ட நிரந்தர தீர்வுகளை விரிவாக நாட்டுக்கு முன்வைத்தல்.

02. தனியார்த் துறை தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2020 ஜனவரியில் மாத குடும்ப வருமானம் ரூ.75,000க்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு, பாண், கோதுமை மா, அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றைக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவும்.

03. மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்குத் தேவையான எரிபொருளை மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சலுகை விலையில் வழங்குதல்.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், அரசியலைச் சீர்குலைக்காமல் அமல்படுத்தும் திட்டமொன்றையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. 

 1. ஒவ்வொரு கிராம சேவகப் பிரிவிலும் இரண்டு வாரங்களுக்குள் மாதம் 75,000 ரூபாய்க்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவும்.

2. இந்த நலனுக்குள் நுழையும் பொது மற்றும் தனியார்த் துறை ஊழியர்களிடமிருந்து அவர்களின் பெப்ரவரி மாத ஊதியத்தின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறவும்,

 3. கிராம சேவகப் பிரிவில் உள்ள பயனாளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடவும்,

4. பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு கூட்டுறவு, சதொச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயரைக் கோரவும், அங்கு குடும்பங்கள் தமது பொருட்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும்.

 மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக இவ்வாறான சலுகை விலையில் பொருட்களை வழங்குவதற்கான விரிவான திட்டமொன்றை முன்வைத்து, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அண்டன் மார்கஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US