இலங்கையின் நெருக்கடிகளை உருவாக்கியவர் கோட்டாபயவே! ஆதாரங்கள் இருப்பதாக தகவல்
உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காத ஜனாதிபதி நெருக்கடியான நிலைமையை உருவாக்கியவர் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலைமையில், தவறான தீர்மானங்களால், அரசாங்கம் வீணாக டொலர்களை செலவிட்டு வருகிறது.
இலங்கைக்கு வந்துள்ள இரண்டு எரிவாயு கப்பல்களில் உள்ள எரிவாயுவை இறக்க முடியாத காரணத்தினால், ஒரு கப்பலுக்கு நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் டொலர் தாமத கட்டணத்தை செலுத்த நேரிட்டது.
இது இலங்கை ரூபாய் பெறுமதியில் 12 கோடி ரூபாய்.
வயிற்றில் சோறு இன்றி இருக்கும் மக்கள் இன்னும் எப்படியான அர்ப்பணிப்பை செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதி விளக்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri