ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலக வேண்டும்: இலங்கை திருச்சபை வேண்டுகோள்
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என இலங்கை திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை திருச்சபை மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை பெறக்கூடிய உண்மையான பிரதிநிதித்து அனைத்து கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நாடு வங்குரோத்து நிலை
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றதற்கான தனிப்பட்ட பொறுப்பை ஜனாதிபதி ஏற்கவேண்டும் எனவும் திருச்சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மக்கள் தனிநபர் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருந்தால் மாத்திரமே அவரது பதவிக்காலம் நியாயதன்மை கொண்டதாக கருதப்படும் என ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம் என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
மதத்தலைவர்கள் முதல் சிவில் சமூகத்தினர் வீதியில் காணப்படும் சாதாரண ஆண், பெண் என அனைவரும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது நாடு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆணை இல்லாமல் போய்விட்டது என்பதை புலப்படுத்தியுள்ளது எனவும் இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
| நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு |