ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க முடியாது: விமலவீர போர்க்கொடி
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதை அனுமதிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
இந்த சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பொதுமக்களுக்கான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், உணவுப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மட்டுமே.
மற்றபடி இவர்களுக்கு அரசியலமைப்பத் திருத்தங்களைக் கொண்டுவர எந்த அதிகாரமும் இல்லை. அதற்கு தேவையும் இல்லை. ஒருசிலரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே அவை எல்லாம் முன்னெடுக்கப்படுகின்றன.
அதே போன்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அவரை சிறைக்கைதி போன்ற நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒருசிலர் முயற்சி செய்கின்றனர். அவ்வாறான திருத்தச்சட்டங்களுக்கு நான் ஒரு போதும் வாக்களிக்க மாட்டேன் என்றும் விமலவீர திசாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முறைமை நீக்கம்! கோட்டா கோ கம போராட்டக்குழுக்கள் தொடர்பில் ரணில் முக்கிய முடிவு (VIDEO) |