ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் பதவி குறித்த தனது நிலைப்பாட்டை வெளியிட்டார் தயாசிறி
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகி தேர்தல் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உறுப்புரிமை இரத்து
எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்மாதிரியான அரசியல் இயக்கத்திற்கான தேசிய இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள இயக்கம்
18 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் திறன் தமக்கு இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வலுவான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கு ஏதாவது பங்களிப்பை கோரினால் அதனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
