திருகோணமலை பெண்கள் பாடசாலையில் தாக்குதலுக்குள்ளான அதிபரின் நிலை! - வெளிவரும் தகவல்

protest trincomalee Sri Shanmuga Hindu Ladies College
By Murali Feb 02, 2022 01:27 PM GMT
Report

தாக்குதலுக்கு உள்ளனதாக கூறப்படும் திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் இன்றைய தினம் ஆசிரியை ஒருவர் அணிந்து வந்த ஆடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

இந்த சம்பவத்தின் போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியையும் தான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,


“பெற்றோர்கள் நாங்கள் வெளியில் இருந்த போது, திடீரென அலுவலகத்தில் இருந்த வந்த குறித்த ஆசிரியை எங்களை புகைப்படம் எடுத்தார்.

எனினும் பாடசாலை வளாகத்தில் அனுமதியில்லாமல் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அந்த ஆசிரியையிடம் தெரிவித்திருந்தோம். எனினும், குறித்த ஆசிரியை அதனையும் மீறி புகைப்படம் எடுத்தார்.

இதன்போது எங்களது புகைப்படங்களை அழிக்குமாறு நாங்கள் கோரிய போதிலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். வட்ஸ்அப் ஊடாக அனைவருக்கும் புகைப்படங்களை அனுப்பினார்.

இதனையடுத்து நாங்கள் கையடக்க தொலைபேசியை வாங்க முற்பட்ட போது அதிபர் மறித்தார். எனினும், அதிபரை குறித்த ஆசிரியை தள்ளிவிட்டார். இதன்போது இரத்த அழுத்தம் கூடிய நிலையில் மயக்கமுற்ற அதிபரை நாங்கள் வைத்தியசாலையில்” அனுமதித்தோம் என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி.........

2017ம் ஆண்டும் இதே போன்றதொரு ஆர்பாட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள் சிலர் பாடசாலை காலச்சாரதிற்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்தமையால், பாடசாலை சமூகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் பண்பாட்டுக்கும் பாடசாலையின் கலாச்சார மரபிற்கும் உரிய ஆடைகளை அணிந்து வருமாறு நிர்வாகத்தினரால் கோரபட்டு, இருந்த போதிலும் சில ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முரண்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் 5 ஆசிரியர்கள் அதனை கருத்தில் கொள்ளாது “ஹபாயா” அணிந்து வந்தனர்.

இதன் காரணமாகவே 2017 ஆண்டு ஆர்பாட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிந்த காலப்பகுதியில் 5 ஆசிரியர்களும் கல்வி திணைக்களத்தினால் வேறு பாடசாலைகளுக்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.

குறித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுசூழ்நிலை காரணமாக விசாரணைகள் தாமதமாகிகொண்டிருந்தமையால் 5 ஆசிரியர்களில் 2 பேர் வேறு பாடசாலைகளுக்கு நிரந்தரமாக இடமாற்றம் பெற்று சென்றனர்.

இருப்பினும் மீதமுள்ள மூவரும் மீண்டும் இன்றைய தினம் (02.02 2022) பாடசாலை நிர்வாகம் ஏற்காத உடை (ஹபாயா) அணிந்து வந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள் 

சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணி என்ன? ஆசிரியர் வெளியிட்டுள்ள தகவல்கள்(Video) 

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பதற்றம்! - அதிபர் - ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி (Video) 


மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US