துறைமுக நகரமென்பது இன்னொரு நாடு - சபையில் லக்ஷமன் கிரியெல்ல
ஒரு நாட்டில் துறைமுக நகரமென்பது இன்னொரு நாடாக இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவுமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை சபையில் நேற்று சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில் லக்ஷமன் கிரியெல்ல குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு நாட்டில் துறைமுக நகரமென்பது இன்னொரு நாடாக இருக்கிறது.
ஒரு நாடு, ஒரே சட்டமென்றாலும், ஒரே நாட்டில் இரு சட்டங்கள் உள்ளன.எனவே, இதுத் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
