காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விசேட உத்தரவோடு பொலிஸார்(VIDEO)
புதிய இணைப்பு
எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார் வருகைத் தந்து விசேட உத்தரவொன்றினை வாசித்து காட்டியிருந்தனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் பயிர்செய்கை மேற்கொண்ட இடங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு தற்போது பொலிஸார் வருகைத் தந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட உத்தரவு ஒன்றை வாசித்துக் காட்டுவதற்காக பொலிஸார் வந்திருப்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam