மன்னாரில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்: பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
மன்னார் இராணுவ சோதனைச் சாவடிக்கு தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆணனி சடலம் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்டது எனவும், சடலத்தில் கருப்பு நிற நீள கை சட்டை, கருப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை
மேலும் அவர் அணிந்துள்ள கருப்பு நிற அரைக் காற்சட்டையில் “SRI LANKA CRICKET” என எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri