ஐரோப்பாவிலுள்ள நபர் ஒருவர் இலங்கையில் பெண்ணுடன் இணைந்து செய்த மோசடி
இத்தாலியில் வசிக்கும் நபர் இலங்கையில் ஆண் பெண்ணுடன் இணைந்து செய்த மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த மோசடி அம்பலமாகி உள்ளது.
சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயை சேர்ந்த 62 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி
இருவரும் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி நாடு முழுவதும் பல்வேறு நபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் ஒருவர் இந்த மோசடியில் தொடர்புப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களை அவர்கள் அடையாளம் கண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
