பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த யாழ். இளைஞன் : ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Kajinthan Nov 21, 2023 11:41 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாலையில் நேர்ந்த துயரம் - புதைந்து போன பகுதி: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

அதிகாலையில் நேர்ந்த துயரம் - புதைந்து போன பகுதி: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டன அறிக்கை

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சித்தங்கேணியை சேர்ந்த அமரர் நாகராசா அலெக்ஸின் பிரிவால் மீளாத் துயரில் உறைந்திருக்கும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த யாழ். இளைஞன் : ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | The Police Should Be Punished Immediately

பொலிஸாரின் சித்திரவதையால் பலியான எங்கள் உயிர் தோழன் அலெக்ஸின் தீர்ப்பு என்ன? கொலை செய்த பொலிஸாரின் இடமாற்றம் இவனின் உயிருக்கு ஈடாகுமா?

சிறுநீரகம் செயலிழக்கும் நிலை வரும் வரைக்கும் கொடூர தாக்குதலை, கண்மூடித்தமான சித்திரவதையை செய்த பொலிஸாரின் அநீதியை தட்டிக் கேட்க எவரும் இல்லையா?

கொலை செய்யப்பட்ட எங்கள் ஊரைச் சேர்ந்த அலெக்சின் உயிரை மீட்டு தரமுடியுமா? கண் மூடித்தனமாக சித்திரவதை செய்த பொலிசாருக்கு என்ன தண்டனை? கொலை உண்ட எங்கள் ஊரைச் சேர்த்த அலெக்சின் வாக்குமூலத்தை கேட்ட பின்னரும் எதற்காக இந்த மௌனம்? சட்டத்தை நிலை நாட்ட முடியாத இது என்ன நாடா? இல்லை சுடுகாடா?

அலெக்ஸின்  மரணத்திற்கு காரணமான பொலிஸாரை உடனடியாக சட்டதின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்காத காரணம் தான் என்ன?

கணவன் - மனைவியின் மோசமான செயல்

கணவன் - மனைவியின் மோசமான செயல்

தண்டனை

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இவ்விடயம் தெரியாமல் போனதா? இந்த கொடூரமான சம்பவத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லையா? உடனடியாக அவருக்கும் தண்டனை கொடுக்க ஏன் தாமதம்? உண்மையான களவாளிகளை கண்டுபிடித்து எங்கள் அலெக்ஸ் நிரபராதி எனும் உண்மையினை அனைவருக்கும் அறியத்தர வேண்டும்.

பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த யாழ். இளைஞன் : ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | The Police Should Be Punished Immediately

மேலும் அலெக்ஸின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடடிவக்கைகளை எடுப்போம் என்பதை உறுதியுடன் அறியத்தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகிய நாமல்: வெளியாகிய காரணம்

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகிய நாமல்: வெளியாகிய காரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US