பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் வெளிவரும் பல ரகசியத் தகவல்கள் - அம்பலப்படுத்தும் சுரேஷ் சலே
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு, நேற்று கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு பாதுகாப்புடன் முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சுரேஷ் சலே சாட்சியம்
அத்துடன், அவர் இந்த வழக்கின் 90 ஆவது சாட்சியாளராக சாட்சியமளிக்க சுரேஷ் சலே சம்மதம் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவினால் சாட்சியப் பதிவு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கையாளுதல், இராணுவச் சட்ட நடைமுறைகள் மற்றும் சுரேஷ் சலே இதற்கு முன்னர் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு இங்கு நீண்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது தவிர, வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதிபால சுரேஷ் குமார எனப்படும் முரளி என்பவரின் சாட்சியம் நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல்
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதியன்று அல்லது அதற்கு அண்மைய நாளொன்றில் கிரித்தலை, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட இரகசியமாக தடுத்துவைக்கும் நோக்கத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிரித்தலை இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam