யாழில் ஆலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு திடீரென ஏற்பட்ட மனமாற்றம்
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், , ஆலயத்திற்குள் காலணியுடன் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும்,குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் உயர் அதிகாரி தான் செய்த தவறை திருத்தும் வகையில் இன்று சந்நிதியான் ஆலயத்துக்கு வருகை தந்த அவர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,அதிகாரிக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
