முன்னாள் பொலிஸ் சார்ஜனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்
இலங்கையின் பொலிஸ் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
17 வருட பொலிஸ் சேவையின் பின்னர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கட்டட நிர்மாண ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரியும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கடந்த 14 ஆம் திகதி இரவு பணியை முடித்துக் கொண்டு, மேலும் சிலருடன் இரவு உணவு அருந்துவதற்காக கொஹுவளையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
பொலிஸ் சின்னங்கள் அடங்கிய ஆடை
இதன்போது முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் இலங்கை பொலிஸில் கடமையாற்றிய காலத்தில் பெறப்பட்ட பொலிஸ் சின்னங்கள் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்து சென்றுள்ளார்.
குறித்த உணவகத்தில் பொலிஸ் சீருடையில் 2 அதிகாரிகளும், சிவில் உடையில் 6 அதிகாரிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், டி-சர்ட் குறித்து விசாரித்துள்ளனர்.
தான் 17 வருடங்களாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டவர் என முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த முன்னாள் பொலிஸ் சார்ஜென்டை கொஹுவல பொலிஸ் நிலையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று அடித்து, பொலிஸ் அறையில் அடைத்துள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் சார்ஜென்ட் கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (18) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |