சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் தடை - சந்திம வீரக்கொடி
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பதவிகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakody) தெரிவித்துள்ளார்.
''அரசியல்வாதிகள் பொலிஸ் துறையில் தலையிடுவது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் தடையாக அமைந்துள்ளது.
இந்த நிலைமை ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இப்படியானவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டாக பிரிந்து, அது குறித்து முழு நாட்டுக்கும் கேட்கும் வகையில் சத்தமிடுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இந்த நிலைமையை தற்போதாவது மாற்றி, மக்கள் வழங்கிய வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும். சௌபாக்கிய நோக்கிற்கு தற்போதாவது உயிர் கொடுக்க வேண்டும்.
சௌபாக்கிய நோக்கில் இருந்து விலகி பைத்தியங்கள் போல் ஆடினால், மக்கள் எதிர்காலத்தில் எம்மை குறித்து எடுக்கும் தீர்மானம் மிகவும் பாரதூரமானதாக இருக்கும்'' எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
அம்பாலங்கொடையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
